Skip to main content

youtube

இளம் நடிகர்களுக்கு அறிவுரை கூறிய ராதிகா

முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதாவின் மகன் சித்து நாயகனாக அறிமுகமாகும் படம் 'உயிரே உயிரே'. இதில் சித்துக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படத்தை ஜெயப்பிரதாவே தயாரித்திருக்கிறார். ஏ.ஆர். ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இந்தி நடிகர் அனில்கபூர், தெலுங்கு நடிகர் மோகன்பாபு, ராதிகா சரத்குமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்று சித்துவை வாழ்த்தினர்.

இதில் ராதிகா பேசும்போது, ''இந்த விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்சினையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக கலந்து கொள்கிறோம். ஆனால், இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் இப்படி இருப்பதில்லை. கீழே படுத்துக்கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

நடிகர் சங்க பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ராதிகா இதுபோல பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமாருடன் மோதும் விஷாலை மனதில் வைத்துத்தான் அவர் இப்படி பேசினாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது
News source: maalaimalar

radika advise to young hero

Comments

Popular posts from this blog

tamil actress hot slow motion oviya and anjali

SUNAINA HOMELY LOOK

tapsee Half saree