பாலிவுட் நடிகை வித்யாபாலன், இந்தியில் வெளிவந்த 'தி டர்டி பிக்சர்ஸ்', 'கஹானி' ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் நடித்த இந்த இரண்டு படங்களுமே இந்தியில் பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டது. இந்த படங்களுக்கு பின்னர், திருமணம் செய்துகொண்ட வித்யாபாலனுக்கு தொடர்ந்து இந்தியில் படங்கள் சரிவர ஓடவில்லை.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'ஹமாரி அதுரி கஹானி' என்ற படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் வித்யாபாலனின் மார்க்கெட் இன்னும் சரிந்தபாடில்லை.
உதாரணம், இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலனை நடிக்க வைக்க அவருக்கு ரூ.18 கோடி சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
வித்யாபாலன் நடித்த படங்கள் சமீபகாலமாக ஓடவில்லையென்றாலும், அவர் திறமையான நடிகை. தத்ரூபமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அவர் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்தவர்.
அதனாலேயே இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வித்யாபாலனுக்கு இவ்வளவு தொகை சம்பளமாக பேசியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது
News source : maalaimalar
Comments
Post a Comment