Skip to main content

youtube

ரஜினியுடன் இணையும் விக்ரம்: 'எந்திரன் 2' அப்டேட்

2016ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எந்திரன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது. 2010ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலைக் குவித்தது.

தற்போது ரஜினி - ஷங்கர் இருவரும் மீண்டும் இணைந்து 'எந்திரன் 2' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், கமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர்.

இறுதியாக, 'எந்திரன் 2' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து ரஜினி, விக்ரம் அனைவருமே இப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள்.

'எந்திரன் 2' படத்தில் நாயகனாக ரஜினி, வில்லனாக விக்ரம், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் வழங்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

 

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance