திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் பட்டியலில் எப்போதும் இருக்கும் பெயர் ஜோக்கர். அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர், பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ பட வரிசையான பேட்மேன் 2-ல் நடித்து அழியாப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய நடிகர் ஹீத் லெட்ஜர்.
பேட்மேன் 2 படம் வெளியானபோது அவரது ஜோக்கர் கதாபாத்திரத்தை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும், பரவசமும் அடைந்தார்கள் கோடிக்கணக்கான ரசிகர்கள். ஜோக்கர் பாத்திரத்திற்காக ஹீத் லெட்ஜருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆனால் இவற்றை பார்க்கத்தான் ஹீத் லெட்ஜர் இல்லை.
படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் மரணத்திற்கு அதிகப்படியான போதை மருந்துதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அவரது ரசிகர்கள் ஜோக்கர் கதாபாத்திரத்தின் பாதிப்புதான் அவரது மரணத்திற்கு காரணம் என்று நம்புகிறார்கள். மரணம் அடையும்போது அவருக்கு வயது வெறும் 28 தான்.
ரசிகர்களின் நம்பிக்கையை உண்மையாக்கும் விதமாக "டூ யங் டு டை" என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீத் லெட்ஜர் எவ்வாறு ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு தயாரானார் என்று அவரது தந்தை விளக்குகிறார். மேலும் ஜோக்கர் பாத்திரத்திற்காக ஒரு மாதத்திற்கு மேலாக தனியாக ஹோட்டல் அறையில் தங்கிக்கொண்டு, ஒரு டைரியில் குறிப்புகளை எடுத்துக்கொண்டது இருந்தது தெரியவந்துள்ளது.
முக்கியமாக அந்த டைரியில் 'பாய் பாய்' (Bye Bye) என்று பெரிதாக எழுதப்பட்டிருப்பது அவரது மரணம் பற்றி பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜோக்கர் பாத்திரம் பற்றி ஹீத் லெட்ஜர் கூறும் போது, "ஜோக்கருக்கு எந்த விஷயமும் பெரிது இல்லை, அவனை பொறுத்த வரை எல்லாம் ஒரு பெரிய ஜோக் தான்" என்று குறிப்பிடுகிறார். ஹீத் லெட்ஜர் நிஜ வாழ்க்கையில் ஜோக்கராக மாறிவிட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அவரது மரணம்
https://youtu.be/TwAtvVNBJmY
watch the video
News source:maalaimalar
Comments
Post a Comment