மென்பொருள் பொறியாளராக ஆக முடியவில்லையே.., என பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது ஏக்கத்தை புதிய கூகுள்
சி.இ.ஓ.வாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சையிடம் முன்னர் பகிர்ந்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஷாருக் கானின் 'ஹேப்பி நியூ இயர்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் ஷாருக் கானுடன் கூகுளின் தற்போதைய சி.இ.ஓ. சுந்தர் பிச்சையும் கலந்து
கொண்டார். இந்த அரை மணிநேர அரட்டை நிகழ்ச்சியை கூகுள்ப்ளெக்ஸ் பதிவு செய்தது.
இந்நிகழ்ச்சியில், சுந்தர் பிச்சை ஷாருக் கானிடம் 'நீங்கள் உங்கள் தொழிலை மாற்றிக் கொள்ள விரும்பினால், என்ன செய்ய
விரும்புகிறீர்கள்?' எனக் கேட்டார்.
அதற்கு ஷாருக் கான், என்ஜினியர் ஆக இருந்த எனது தாத்தா, பாட்டியைப் பார்த்தே வளர்ந்ததால் நானும், அவர்களைப்
போலவே என்ஜினியராகவே விரும்புவேன் என பதில் அளித்திருந்தார்.
'பார்க்க முட்டாள் போல தோன்றினாலும், நான் புத்திசாலி. பள்ளிப் பருவத்தில் மின்னணுவியல்(electronics) பாடத்தில் 98
மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தொழிற்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி-யிலும் பயில எண்ணி நுழைவுத் தேர்வும் எழுதியிருந்தேன்'
என இந்நிகழ்ச்சியின்போது ஷாருக் கான் குறிப்பிட்டார்.
தற்போது, புதிய கூகுள் சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த செய்தி மீண்டும் ஊடகங்களில் வலம்வர
தொடங்கியுள்ள
News source :maalaimalar
Comments
Post a Comment