தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், டைரக்டர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் 'கலைப்புலி' எஸ்.தாணு, டி.சிவா, விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, 'பெப்சி' சிவா ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-
தயாரிப்பாளர், கதாசிரியர், டைரக்டர் வி.சேகர் நல்ல பண்புள்ள மனிதர். வாழ்வியல், சமூக சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு சொன்னவர். அப்படிப்பட்ட நல்ல மனிதர் மீது சிலை கடத்தலில் ஈடுபட்டதாக பழி விழுந்திருக்கிறது.
இதை கேட்டவர்களும், படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சொன்ன ஆதாரமற்ற தகவலை நம்பி, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது திரையுலகை சார்ந்த எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் தந்துள்ளது.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் டைரக்டர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் புழல் சிறைக்கு சென்று வி.சேகரை சந்தித்த போது, இந்த குற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தான் எந்த ஒப்புதலும், எழுத்து மூலமாகவோ, வாக்குமூலமாகவோ கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தயவுசெய்து உண்மையை கண்டுபிடித்திட ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழக காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News source :maalaimalar
Comments
Post a Comment