Skip to main content

youtube

போலி ஆபாச வீடியோவால் எனது வாழ்க்கை பாதிக்கவில்லை: நடிகை ஆஷா சரத் பேட்டி

மலையாளத்தில் பிரபல நடிகர் மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷாசரத். இந்த படம் தமிழில் கமலஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக ஆஷாசரத் நடித்திருந்தார்.

தற்போது அவர் கமலஹாசனுடன் 'தூங்காவனம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆஷாசரத்தின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நடிகை ஆஷாசரத் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

அதனடிப்படையில் மலப்புரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போலி ஆபாச வீடியோ வெளியானது பற்றியும் அது தனக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் ஆஷாசரத் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:–

எனது பெயரில் போலி ஆபாச வீடியோ வெளியானபோது நான் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டேன். நான் திருமணம் ஆன பெண். 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனால் எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

ஆனால் அந்த வீடியோவால் எனது வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.

சூட்டிங்கிற்காக நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது .அப்போது ஓட்டல்களில் தங்கவேண்டியது வரும். அதுபோன்ற சூழ்நிலையில் நான் உடை மாற்றும்போது யாராவது ரகசியமாக காமிராவில் படம்பிடித்திருப்பார்களோ? என்று எண்ணிப்பார்த்தேன்.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஏனென்றால் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நாளில் நான் சொந்த ஊரில்தான் இருந்தேன். இருந்தாலும் இந்த பிரச்சினையை போலீஸ் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்தேன்.

அதன்படி போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தேன். மேலும் தொடர்ந்து அதை வலியுறுத்தி வந்தேன். இதனால் குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் 20 வயது நிரம்பாதவர்கள். போலி பேஸ்புக் முகவரி மூலம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் எதற்காக இப்படி செயல்பட்டனர் என்று விசாரித்தேன். அதன் பிறகுதான் இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்கள் பணம் சம்பாதிப்பது தெரிய வந்தது.

நான் எனக்காக மட்டும் போராடவில்லை. எல்லா பெண்களுக்காகவும்தான் போலீசில் புகார் செய்தேன்.

எனது 2 பெண் குழந்தைகளுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன்.

எனக்கு பிரச்சினை ஏற்பட்டபோது எல்லோரும் உதவினார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் சமூகவலைதளங்களை குறை சொல்லவில்லை. 100 பேரில் சிலர் இப்படி செயல்படுவதால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

சமூகவலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளது. நான் 21 வருடங்களாக துபாயில் வசித்து வருகிறேன். அங்கெல்லாம் இதுபோன்ற குற்றத்துக்கு பெரிய தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதற்காக நமது சட்டத்தை நான் குறைகூறவில்லை. குற்ற செயல்கள் அதிகரிப்பதைதான் வேதனையுடன் கூறுகிறேன்.

சமூகவலைதளங்களில் எனது படத்துடன் செய்தி வெளிவந்ததால் அதற்கான விமர்சனங்கள் வாசிக்கமுடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. இதுபோன்ற நிலை மாறவேண்டும் என்றார்.

News source :maalaimalar

Comments

Popular posts from this blog

tamil actress hot slow motion oviya and anjali

SUNAINA HOMELY LOOK

tapsee Half saree