Skip to main content

youtube

தமிழ் சினிமா நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை: த்ரிஷா

'நாயகி' போட்டோ ஷுட்டில் த்ரிஷா
நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை என்று 'நாயகி' பட பூஜையில் த்ரிஷா தெரிவித்தார்.

த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், பிரம்மானந்தம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கும் படம் 'நாயகி'. கோவி இயக்கவிருக்கும் இப்படத்தை கிரிதர் மற்றும் பத்மஜா தயாரிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தின் பூஜை சென்னையில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பட பூஜை முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் த்ரிஷா பேசியது, "இப்படத்தின் பாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணாத ஒரு பாத்திரமாகும். முழுக்க ஒரு பேய் காமெடி படம் நான் பண்ணியதில்லை. 'நாயகி' முழுக்க நாயகிக்கான படம் என்று கூற முடியாது. நிறைய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இயக்குநர் மிக அழகாக அமைத்திருக்கிறார்.

நிறைய பேய்ப் படங்கள் வந்திருக்கிறது. அதில் 90% படங்கள் வெற்றியடைந்து இருக்கின்றன. மக்களுக்கு அந்தப் படங்கள் மிகவும் பிடித்திருக்கிறது, எனக்கு அந்த மாதிரியான படங்கள் பிடிக்கும். 1980-களில் இருப்பது போன்ற பாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன், படம் முழுவதும் அப்படித் தான் வருவேன். நான் பேயா அல்லது கொலை பண்ணும் பாத்திரமா என்பதை இப்போது சொல்ல முடியாது. நானும் வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணியிருப்பதால் இப்படத்தை தேர்வு செய்திருக்கிறேன். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

News source :The Hindu Tamil cinema

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance