தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற மனக்குறையை தவிர, மற்றபடி சில மாதங்கள் முன்பு வரை ஓரளவு மன நிறைவாகவே இருந்தார் பாவனா. ஆனாலும் சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தும் நீடிக்க விரும்பும் நடிகைகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையைத்தான் பாவனாவும் எதிர்கொள்ளும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.. மலையாளத்தில் 'ஹலோ நமஸ்தே' படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள பாவனா, தற்போது ஆசிப் அலி நடித்துள்ள 'கோஹினூர்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் ஆடியோ ரிலீசில் கலந்துகொண்ட பாவனா, இந்தப்படத்தில் நானும் ஒரு முக்கிய பொறுப்பேற்று இருக்கிறேன் என கூறினார். அப்போதே ஒரு சின்ன சந்தேகம் தோன்றத்தான் செய்தது. காரணம் படத்தின் கதாநாயகியாக நடிப்பவர் அபர்ணா வினோத் என்பவர். பின் எப்படி பாவனா டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டார் என்றால், படத்தின் ஹீரோவான ஆசிப் அலியுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் பாவனா. இந்தப்படத்தை ஆசிப் அலியே தயாரிப்பதால், அவரது வேண்டுகோளுக்காக ஒரே ஒரு பாடலில் ஆடிக்கொடுத்துள்ளாராம் பாவனா.
News source :Dinamalar

Comments
Post a Comment