பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு தாயானது முதல் 4 ஆண்டுகளாக நடிப்புக்கு இடைவெளி விட்டு இருந்தார். தற்போது 'ஜஸ்பா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்த வந்தது. படக்குழுவினருடன் ஐஸ்வர்யாராய் எளிமையாக பழகினார்.
இதனால் படக்குழுவினர் அனைவரும் ஒரே குடும்பம் போல பழகி வந்தனர்.
ஐஸ்வர்யாராய் தொடர்பான காட்சிகள் 51 நாட்கள் படமாக்கப்பட்டன. அவர் பங்கேற்று நடித்த காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.
அப்போது ஐஸ்வர்யாராய் கண்ணீர் விட்டு அழுதார். இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்தோம். இப்போது உங்களைப் பிரிவது வருத்தமாக உள்ளது என்று கூறினார்.
அப்போது அவரது மேக்கப்மேன் மிக்சியை கட்டிப்பிடித்தார். அவரையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ஐஸ்வர்யாராய் உணர்ச்சி வசப்பட்டு அழுததை கண்ட படக்குழுவும் கண்கலங்கி நின்றது.
News source :maalaimalar
Comments
Post a Comment