'கபாலி' படப்பூஜையில் ரஜினிகாந்த்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. படக்குழுவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்ட படம் 'கபாலி'. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அப்போஸ்டர்களில் உள்ள ரஜினியின் தோற்றம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மலேசியாவில் தொடங்கப்படவிருந்த 'கபாலி' படப்பிடிப்பு, இன்று முதல் சென்னையில் துவங்கியிருக்கிறது. காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள RUSSIAN CULTURE CENTER-ல் படப்பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினி, கலையரசன் உள்ளிட்ட சிலர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்க படக்குழுட் திட்டமிட்டு இருக்கிறது.
முதல் காட்சியாக ரஜினி கோட்-சூட் அணிந்து நடந்து வருவது போன்ற காட்சியைப் படமாக்கினார்கள். RUSSIAN CULTURAL CENTER-ல் படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. படத்தின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் எதுவும் வெளியாகி விடக்கூடாது என படப்பிடிப்பு அரங்கினும் செல்போனுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
'கபாலி' கதைக்களம்
மயிலாப்பூரில் வாழும் கபாலீஸ்வரன் என்ற வயதான தாதா பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. அந்த ஏரியாவில் உள்ள சின்ன தாதாக்களை எல்லாம் அழித்து பெரிய தாதாவாக ஆகியிருக்கிறார் ரஜினி. அப்போது தனது நண்பர்களின் மகன்களை மலேசியாவுக்கு வேலைக்கு என்று அழைத்து சென்று ஏமாற்றியது ரஜினிக்கு தெரிய வருகிறது. அவர்களை எதிர்த்து போராடி எப்படி வெற்றியடைகிறார் ரஜினி என்பது தான் 'கபாலி' கதைக்களம்.
மோகன் ஸ்டூடியோவில் கடுமையான கெடுபிடி
RUSSIAN CULTURE CENTER படப்பிடிப்பைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் 'கபாலி' படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அங்கு தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படப்பிடிப்பு நடைற்று வருகிறது. அப்படப்பிடிப்பு முடிந்தவுடன், 'கபாலி' படப்பிடிப்பு தொடங்குகிறது. 'கபாலி' படப்பிடிப்பு நடைபெறும் போது, வேறு எந்த ஒரு படப்பிடிப்புக்கும் அனுமதி கிடையாது.
மோகன் ஸ்டூடியோ படப்பிடிப்பைத் தொடர்ந்து EVP-ல் மலேசியாவில் உள்ளது போன்ற வீடு அமைப்பு, கடைகள் உள்ளிட்ட அரங்குகளில் படப்பிடிப்பு தொடக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சென்னை படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு, இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டுமே மலேசியாவில் நடைபெற இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
News source : The hindu Tamil
Comments
Post a Comment