நடிகை அமண்டா ஜோடியாக நடித்துள்ள படம் 'சாஹசம்' இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய பிரசாந்த்:–
இங்கு பேசியவர்கள் எனது படங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாக கூறினார்கள். பொன்னர் சங்கர் படம், மலையூர் மம்முட்டியான் படங்கள் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. இதனால் அடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை. அந்த படங்கள் வித்தியாசமானவை.
இப்போது நான் நடித்திருக்கும் 'சாஹசம்' முற்றிலும் மாறுபட்ட படம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாயகி என்னுடன் நடித்து இருக்கிறார். தமன் இசையில் 5 பாடல்கள் சிறப்பாக வந்து இருக்கிறது. அதற்கான நடன காட்சிகளும் வெளிநாடுகளில் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.
படத்துக்கு அதிக செலவு ஆனது பற்றி எனது தந்தை தியாகராஜன் கவலைப்படவில்லை. தாராளமாக செலவு செய்தார்.
நான் 17 வயதில் நடிக்க வந்தேன். இப்போது ஒன்றும் அதிக வயது ஆகிவிடவில்லை. இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, மதன்பாபு, ரோபோ சங்கர், பிரியதர்ஷினி உள்பட அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.
இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன். இனி எனது படங்கள் தொடர்ந்து வரும். அதிக இடைவெளி இருக்காது என்றார்.
தியாகராஜன் பேசும் போது, வெற்றி பெற்ற பல மொழி படங்கள் எங்கள் கைவசம் இருக்கிறது. அதை தொடர்ந்து ரீமேக் செய்து வெளியிடுவேன். அதில் பிரசாந்த் நடிப்பார். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இசை சிறப்பாக உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப், ஜெர்மன், தாய்லாந்து தூதர்கள், டைரக்டர் அருண் குமார் சர்மா, இசை அமைப்பாளர் தமன் ரோகினி, நா.முத்துகுமார், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ரோபோசங்கர் தொகுத்து வழங்கினார்.
News source :maalaimalar
Comments
Post a Comment