Skip to main content

youtube

சிவகார்த்திகேயனை தாக்கிய கமல் ரசிகர்கள்! மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!!


சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் இணையதளங்களில் காரசாரமாக மோதிக்கொள்வது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது அவர்களது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற பிரச்சினைகளால் மோதிக்கொள்வதும் வாடிக்கையான விசயமாகி விட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், தன்னை ரஜினி ரசிகர் என்று சொன்னவர், கமலைப் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதையடுத்து இணையதளங்களில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று திருசெந்தூரில் நடைபெற்ற விழா ஒன்றுக்காக சிவகார்த்திகேயன் மதுரைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிவகார்த்திகேயன் வருவதை கேள்விப்பட்ட மதுரையிலுள்ள கமல் ரசிகர்கள் விமான நிலையத்திலேயே காத்திருந்து, அவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தபோது தாக்கினார்களாம். சிவகார்த்திகேயனுடன் சென்ற பாதுகாவலர்கள் தலையிட்டு தடுத்தார்களாம். இந்த சம்பவத்தால் நேற்று காலை மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாம். இதுகுறித்த வீடியோ ஒன்றும் யு-டியூப்பில் வெளியாகியுள்ளது.
அதேசமயம், இதே விழாவுக்கு கமல், ஹன்சிகா உள்ளிட்டோரும் சென்றதாகவும், சிவகார்த்திகேயனை தாக்கியவர்கள் கமல் ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து வாய் திறந்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

News source :Dinamalar

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance