எழுத்தின் அளவு:
இந்திய அளவில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட படமான பாகு பலியில் பிரபாஸ், ராணா போன்ற தெலுங்கு நடிகர்களே ஹீரோ-வில்லன் என நடித்திருந்தபோதும் அப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்லதொரு ஓப்பனிங் கிடைத்தது. இப்போதும் பல தியேட்டர்களில் அப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அதன்பிறகு வெளியான ஜெயம்ரவியின் தனி ஒருவன் படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்ததால், தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கடுத்த வாரம் விஷாலின் பாயும்புலி உள்ளிட்ட சில படங்கள் ரிலீசானபோது தனிஒருவன் வசூல் பாதிக்கப்படும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பாயும்புலி வெற்றி பெறாததால் இப்போதுவரை தனி ஒருவன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வசூலித்துக்கொண்டிருக்கிறது.
அதோடு, தமிழ்நாட்டில் பாகுபலி பெரிய அளவில் வசூலித்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வசூலை தனிஒருவன் முறியடித்து விட்டதாம். அது மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஜெயம்ரவியின் படங்களுக்கு இதுவரையில்லாத வரவேற்பு இந்த படத்துக்கும் கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, கிளாமர், குத்துப்பாட்டு என்பதில் இருந்து விடுபட்டு நல்ல கருத்துள்ள படம் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இந்த தனிஒருவன் படம் மூலம் புரிந்து கொண்ட கோலிவுட் டைரக்டர்களும் இப்போது தனிஒருவன் போன்று தரமான கதைகளை தயார் செய்யத் தொடங்கிவிட்டனர்
News source :dinamalar
Comments
Post a Comment