'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் 'நானும் ரவுடிதான்' படம் வெளியாக காத்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
சிறப்பான கூட்டணி அமைத்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது. தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக விஜய்சேதுபதியின் 10 வயது மகன் சூர்யா சேதுபதி இந்தப் படத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிக்க, ஒரு சிறுவனைத் தேடி, யாரும் பொருத்தமாக இல்லாததால் விஜய் சேதுபதியின் மகனையே நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனை விஜய் சேதுபதியும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை கூற மறுத்த அவர், என்ன வேடம் என்பதை நீங்களே திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
News source : maalaimalar

Comments
Post a Comment