2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வெளியான எந்திரன் படம் பிரம்மாண்டத்தில் உச்சமாக இருந்தது. இப்போது எந்திரன் 2 தயாராக இருக்கிறது. இப்படத்தை பற்றி பேச ஆரம்பித்ததில் இருந்தே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு தொடங்கிவிட்டது.
ரஜினி அடுத்து படத்தில் இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக டி.முத்துராஜ், கிராபிக்ஸ் காட்சிகள் ஸ்ரீனிவாஸ் மோகன், எடிட்டிங் ஆண்டனி ஆகியோர் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு சமீபத்தில் கூட வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடிப்பத்தற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருடன் பேச்சு நடத்தபட்டதாகவும் அவர் எந்திரன் 2 படத்தில் நடிக்க ரூ 100 கொடி கேட்டதாகவும் தகவல் வெளியானது . தற்போது இந்த தகவல் உண்மைதான் என தெரிய வந்து உள்ளது.
இதில் அர்னால்டு முரட்டு ரோபோவாக நடிக்கிறார்.68 வயதான நடிகர் அர்னால்டு நடிக்கும் முதல்கட்ட படப்பிடிப்பு , ஜனவரி 25 நாட்கள் நடக்கிறது.
இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு தயாரிப்பாளரின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்து உள்ள தகவலில் "ரஜினிக்கு எதிரியாக நடிக்க அர்னால்டை அணுகி உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அவர் இன்னும் இதில் கையெழுத்திடவில்லை. விரைவில் நடிகர் பாத்திரத்திற்கு உரிய மேக்கப் டெஸ்ட்டில் விரைவில் பங்கேற்க உள்ளார்".என கூறினார்.
எந்திரன் 2' படம் முழுவதும் 3டி கேமராவில் படமாக்கப்பட உள்ளது. இந்தியாவில் 3டி கேமராவில் படமாக்கப்படும் முதல் படம் 'எந்திரன் 2' என்று கூறப்படுகிறது. மேலும் படத்தில் உள்ள சில காட்சிகளை மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படமாக்க உள்ளார் ஒளிப்பதிவாளர், நீரவ் ஷா. கோச்சடையான், அவதார் போன்ற படங்கள் மோசன் கேப்சர் வகை தொழில்நுட்பத்துடன் படமாக்கப்பட்டவை. மோசன் கேப்சர் தொடர்பான காட்சிகள் ஹாலிவுட் ஸ்டூடியோவில் படமாக்கப்பட உள்ளன.

News source:dailythanthi
Comments
Post a Comment