Skip to main content

youtube

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

3139 வாக்காளர்கள் கொண்ட இந்த தேர்தலில் 2607 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில் 1824 வாக்குகள் நேரடியாகவும் 783 வாக்குகள் தபால் மூலமாகவும் பதிவானது. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களும், நடிகைகளும் மிகவும் ஆர்வமாக வாக்களித்தனர்.

மாலை 6 மணியளவில் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர். பரபரப்பாக நடந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

கார்த்திக் 1384 வாக்குகுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர். கண்ணன் 1031 பெற்றுள்ளனர்.

News source:maalaimalar

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance