சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது என் மீதான முறைகேடு புகார்கள் என்னை காயபடுத்தின.என் மீதான புகார்கள் முறைகேடுகள் புகார்களில் உண்மையில்லை. எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பின் இந்த ரத்து செய்யபட்ட விஷயத்தை அறிவிக்க இருந்தேன். கடந்த செப்டம்பர் மாதம் 29 ந்தேதியே ஒப்பந்தம் ரத்து செய்யபட்டு விட்டது. புதிய நிர்வாகிகளுக்கு எந்த நேரத்திலும் உதவ தயார். வெற்றி தோல்வியை வாழ்க்கையில் பல முறை சந்தித்து விட்டேன்.என கூறி இருந்தார்.
இதுகுறித்து நடிகர் சங்க புதிய பொதுச்செயலாளர் விஷால் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது பேட்டி வருமாறு:-
எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட புகழ் பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்டு பெருமை பெற்றது நடிகர் சங்கம். அவர்களால் வாங்கப்பட்ட இடத்தை காப்பாற்ற வேண் டும் என்பதற்காகவே இவ் வளவு நாள் கஷ்டப்பட் டோம்.
நடிகர் சங்கத்தை அனைத்து அமைப்புகளுக்கும் முன் உதாரணமான சங்கமாக மாற்றிக் காட்டுவது எங்கள் கடமை. நலிந்த கலைஞர் களுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தருவதே எங்கள் முதல் வேலை.
நாடக நடிகர்களின் நிலையை பார்க்கும்போது கண்கலங்குகிறது. அவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப் பினர்களின் விவரங்கள் அடங்கிய புதிய இணைய தளம் தொடங்கப்படும். இது அவர்களுக்கு பெரிய அடையாளத்தை தரும்.
இளம் அணியினர் சேர்ந்து இந்த வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார்கள். நடிகர் சங்க நிலத்தில் கட்டப்பட இருக்கும் புதிய கட்டிடம்தான் எங்கள் விலாசம் என்ற பொறுப்புடன் பணியை தொடங்குவோம்.
நடிகர் சங்க கட்டிடத்துக் கான ஒப்பந்தம் போட்டபோது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுத்ததாக முன்னாள் தலைவர் தெரிவித்து இருந் தார். ஆனால் இப்போது தேர்தலுக்கு முன்பே புதிய கட்டிடத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்ட தாக முன்னாள் தலை வர் தெரிவித்து இருக்கிறார். விளக்கமும் கொடுத்துள்ளார். இது புதிய தகவலாக இருக்கிறது.
ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்காதது ஏன் என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து விட்டு முடிவு எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
பூச்சிமுருகன் கூறும் போது, 'பொதுக்குழு, செயற் குழுவை கூட்டி தீர்மானம் போட்டுதான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும். தனிப்பட்ட முறையில் ரத்து செய்ய முடியாது' என்றார்.
சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தனது டுவிட்டரில் உணர்வுபூர்வமான கருத்தைத் வெளியிட்டு உள்ளார்.
தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே... சரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ராதிகா ட்வீட் செய்துள்ளார்.
Radikaa Sarathkumar @realradikaa Hang ur heads in shame for the false accusations friends.Proud of you Sarath #empty victory
News source:dailythanthi
Comments
Post a Comment