ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஆன்டிரியா ஒரு தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
எனக்கு இதுவரை காதல் கடிதம் எதுவும் வந்தது இல்லை. ஆனால் நிறைய போன் வருகிறது. அதில் பேசும் ரசிகர்கள் என்னுடன் ஆசையாக பேசுவார்கள் என்னை புகழுவார்கள். சிலர் தங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்பார்கள். எனக்கு வரும் கணவர் உண்மை யான வராக இருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. என்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் பார்க்க கூடாது.
இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போல ஏ.ஆர்.ரகுமானும் நடிக்க வந்தால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பேன். அஜித் படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க ஆசை. வாய்ப்பு வந்தால் கதை கேரக்டர் பற்றி கேட்காமல் நடிப்பேன். கிசுகிசுவை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை என்றார்.
News source:maalaimalar
Comments
Post a Comment