Top ten news .Tamil News App
80-களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ராம்கி, நீண்ட இடைவெளிக்கு பிறகு 'பிரியாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆனார் அதன்பிறகு ஒரு சில படங்களில் முக்கியத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.
தற்போது 'இங்கிலீஷ் படம்' என்ற படத்தில் நாயகன் சஞ்சீவ், ஸ்ரீஜா தாஸ், மீனாட்சி, மதுமிதா ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இப்படத்தை குமரேஷ் குமார் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பின்போது சஞ்சீவ், ஸ்ரீஜா குழுவினர் ராம்கியை காரில் துரத்த, ராம்கி ஓடும் காரிலிருந்து குதித்து உயிர் தப்புவதுபோல் சேசிங் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.
இந்த காட்சியில் நடிக்க ராம்கியை டூப் போடச் சொல்லி இயக்குனர் வற்புறுத்தியிருக்கிறார்.
ஆனால், இந்த காட்சி தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக ராம்கி டூப் போடாமல் தானே நடிப்பதாக இயக்குனரிடம் பிடிவாதமாக கூறி அவரே நடித்தாராம். அப்போது, ஓடும் காரிலிருந்து ராம்கி குதிக்கும்போது, ராம்கியை துரத்தி வந்த கார் பிரேக் பிடிக்காமல் அவர் மீது மோத செல்ல, ராம்கி தக்க சமயத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு, அதிலிருந்து தப்பித்தாராம்.
ராம்கியை துரத்தி வந்த கார், அவர் பயணித்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேர தாமதத்திற்கு பிறகு டூப் போடாமலேயே அந்த காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் ராம்கி. காட்சியும் மிக தத்ரூபமாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இயக்குனர் குமரேஷ் குமார் கூறும்போது, வளர்ந்து வரும் ஹீரோக்களே இப்போதெல்லாம் சிறிய ஜம்பிங் காட்சிகளுக்கே டூப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய காட்சியை டூப் போடாமல் ராம்கி நடித்து கொடுத்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார்.
இப்படத்தை ஆர்.ஜே.மீடியா கிரியேஷன் சார்பில் வாசுகி தயாரித்துள்ளார்.
Comments
Post a Comment