கமல்ஹாசனைக் குறி வைத்தே வேண்டுமென்றே இது நடக்கிறதா அல்லது யதேச்சையாக நடக்கும் நிகழ்வா என்று தெரியவில்லை. 'தூங்காவனம்' படத்தின் முதுல் டிரைலரை கடந்த மாதம் 17ம் தேதி வெளியிட்டார் கமல்ஹாசன். டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் அதிகமாகப் பேசப்பட்டது. ஆனால், அன்றிரவு திடீரென ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு 'தூங்காவனம்' பேச்சை அப்படியே அமுக்கி விட்டார்கள். மறு நாள் வரை 'கபாலி' படத்தின் முதல் பார்வை பற்றிய பேச்சுத்தான் அதிகமாக இருந்தது. இருந்தாலும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தின் முதல் டிரைலர் 25 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
நேற்று 'தூங்காவனம்' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த டிரைலர் பற்றிய பேச்சு ஆரம்பமாவதற்குள் 'வேதாளம்' படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 'கபாலி' படத்தின் முதல் பார்வை எப்படி 'தூங்காவனம்' முதல் டிரைலர் பற்றிய பேச்சை அமுக்கியதோ, அதே போல 'வேதாளம்' படத்தின் டீசர் வெளிவந்து 'தூங்காவனம்' படத்தின் இரண்டாவது டிரைலர் பற்றிய பேச்சையும் குறைத்துவிட்டது. இன்று 8ம் தேதி 12:01 மணியிலிருந்து 'வேதாளம்' டீசர் பற்றியே சமூக வலைத்தளங்களில் பேச்சு பரவி 'வேதாளம்' பற்றியவற்றை மட்டுமே டிரென்டிங்கில் வைத்துக் கொண்டிருக்கிறது.
கபாலியும், வேதாளமும் தூங்காவனத்தில் இப்படி விளையாடுவது சரியா ?
News source :Dinamalar
Comments
Post a Comment