Skip to main content

youtube

சினிமா ஆன்ட்டி என்று கிண்டலடித்தவரை வறுத்தெடுத்த நடிகை சுவாதி!

நடிகர் நடிகைகள் ஃபேஸ்புக்கில் தங்கள் கருத்தை அல்லது புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் போதும் அவர்களின் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் மழை போல பொழிந்துவிடுவார்கள். ஆனால் நடிகைகளின் பக்கங்களில் சில ஆபாச கமெண்டுகளை போடும் விஷமிகள் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கண்டும் காணாமல் விடாமல் உடனடியாக பதிலடிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள் நடிகைகள்.
இதற்கு முன்னோடியாக டிவிட்டரில் நடிகை விஷாகா சிங் தன்னை கேலி செய்த நபரைக் கண்டித்து அதிரடி கமெண்ட் போட்டார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகை சுவாதி ரெட்டி அவரது ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்த ரசிகருக்கு சரமாறியாக பதிலடி தந்துள்ளார்.
சுவாதி இன்ஸ்டாகிராமில் புடவை அணிந்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தன் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். அதில் கமெண்ட் பகுதியில் ஒரு நபர், 'இது போல படங்களை போடவேண்டாம் ஆன்ட்டி போல இருக்கீங்க…' என்ற ரீதியில் கமெண்ட் போட்டுள்ளார்.
அதற்கு பதிலடியாக ஸ்வாதி, 'நான் ஆன்ட்டிதான். சங்கடப்படும் அளவிற்கு அது ஒன்றும் கெட்ட வார்த்தையில்லையே. உன் போன்றவர்களுக்குத்தான் இயல்பாக இருப்பது பிரச்னை. எப்போதும் பதினாறு வயது தோற்றத்துடன் இருக்க முடியுமா என்ன? பத்திரிகைகள், சோஷியல் மீடியாக்கள் நிர்ணயித்துள்ள எடையை விட நான் அதிக எடையுடன் இருப்பதால் ஆன்ட்டி என்று சொல்வீர்களானால் நான் ஆன்டிதான். அதில் எனக்கு பெருமையே தவிர பிரச்னை ஏதுமில்லை. புரியுதா அங்கிள்? உன் இலவச அட்வைஸ் எல்லாம் எனக்குத் தேவையில்லை' என்று பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'இந்த நபரின் கிண்டலை நான் கடந்து போக விரும்பவில்லை. இது போன்று கமெண்டுகளைப் போடுபவர்களுக்கான ஒட்டுமொத்த பதில் இது. நான் சின்ன வயது முதல் பார்த்து வளர்ந்த ஆன்ட்டிகள் எல்லாம் அற்புதமான பெண்கள். நானும் அவர்களைப் போலத்தான். எனவே ஆன்ட்டிகளை குறைத்து மதிப்பிடவேண்டாம்' என்று சுடச் சுட கமெண்ட் போட்டுள்ளார் சுவாதி.
முன்பெல்லாம் ஈவ்டீசிங் என்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு பெண்களிடம் வாலாட்டிய நபர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் சோஷியல் நெட்வொர்க்கில் தங்கள் இழிசெயல்களைத் தொடர்கிறார்கள். பெண்கள் தானே என்ன செய்துவிட முடியும் என்று தங்கள் வக்கிரத்தை கொட்டுகிறார்கள். அதைப் பார்த்து ஒதுங்காமல் குரலை உயர்த்தி அந்தக் கோழைகளின் முகத்திரையைக் கிழிக்கும் தைரியமான பெண்களை பாராட்டவே வேண்டும்.

Popular posts from this blog

TAMIL SAREE DANCE NAMITHA

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali