Skip to main content

youtube

இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக உருவாகிறது ரஜினி - ஷங்கர் படம்!



6
இந்தியாவின் பிரமாண்ட படம் என்று இதுவரை பாகுபலியைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா... இதனை மிஞ்சும் பிரமாண்டம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகவிருக்கிறது ரஜினியும் ஷங்கரும் மூன்றாவதாக இணையுதம் புதிய படம்.
பிரமாண்ட வெற்றிப் பெற்ற எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கவிருந்தார். அது எந்திரன் 2 என்றனர். ஆனால் அந்தப் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது
2016-ல்
இந்த நிலையில் 2016-ல் ரஜினி - ஷங்கர் படம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தில் ரஜினியுடன் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கப் போகிறார். விக்ரம்தான் அந்த நடிகர் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அவர் சர்வதேச அளவில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது.
ரஜினிக்கு ஜோடி
ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு தரப்படும் சம்பளம், ஆசியாவில் எந்த நடிகரும் வாங்காதது என்கிறார்கள். இயக்குநர் ஷங்கருக்கு ரூ 20 கோடி சம்பளம் என்கிறார்கள்.
சம்பளம் ரூ 100 கோடி
ரஜினி சம்பளம் தவிர்த்து, மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமே ரூ நூறு கோடியைத் தொடும் என்று கூறப்படுகிறது. மொத்த பட்ஜெட் ரூ 250 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டம்
இதன்படி பார்த்தால் இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவில் அதிக செலவில் உருவாகும் படம் ரஜினி - ஷங்கரின் படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
5/6
இரண்டாண்டுகள்
இந்தப் படம் முடிய இரண்டாண்டுகள் ஆகும். அதைச் சொல்லியே ஒவ்வொரு கலைஞரையும் ஒப்பந்தம் செய்கிறார்கள். 2017 அல்லது 2018-ன் ஆரம்பத்தில்தான் இந்தப் படம் ரிலீசாகும்.
News source  : tamil.filmibeat.com

Popular posts from this blog

TAMIL SAREE DANCE NAMITHA

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

SUNAINA HOMELY LOOK