தமிழில் சினேகிதியே, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் சுவேதா மேனன் நடித்துள்ளார்.
மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். நிறைய படங்களில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.
படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்துள்ளார்.
இணைய தளங்களில் அவரது ஆபாச படங்கள் பரவி கிடக்கின்றன.
அத்துடன் தனது பிரசவத்தை நேரடியாக படம் பிடித்தும் பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை என்று சுவேதா மேனன் அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:–
கவர்ச்சி வேடங்களில் நடித்து அலுத்து போய் விட்டேன். இனி அது போன்ற கேரக்டரை ஏற்க மனம் இல்லை.
சவாலான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அது மாதிரியான கதைகளை தேடுகிறேன். காமெடி வேடங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது.
பழைய இமேஜில் இருந்து என்னை மீட்டெடுப்பதை அவசியமாக கருதுகிறேன்.
எனக்குள் நிறைய திறமைகள் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்கப்போகிறேன்.
இவ்வாறு சுவேதா மேனன் கூறினார்
News source : maalaimalar

Comments
Post a Comment