இயக்குநர் ரஞ்சித் | கோப்பு படம்
'முள்ளும் மலரும்' காளி போன்ற கதாபாத்திரத்தில் தனது படத்தின் மூலம் ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என்று இயக்குநர் ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை, முரளி ஒளிப்பதிவு, ப்ரவீன் எடிட்டிங் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தம் மாதம் தொடங்க இருக்கிறது.
ரஜினி படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனதில் இருந்தே, இயக்குநர் ரஞ்சித் சமூக வலைத்தளம் உள்ளிட்ட எதிலுமே தலைக்காட்டுவதில்லை.
முதன் முறையாக ஒரு விருது வழங்கு விழாவில் கலந்து கொண்டார் ரஞ்சித். அவ்விழாவில், "ரஜினிகாந்துடன் நான் இணைந்து பணியாற்றும் படத்தின் மூலம் 'முள்ளும் மலரும்' காளியை திரையில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.
எனது 'மெட்ராஸ்' திரைப்படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படத்தின் பாத்திரங்கள் மிகவும் யதார்த்தமாக இருந்ததாக தெரிவித்தார். அதேபோல எனது படத்தில் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்" என்றார் ரஞ்சித்.
பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க
News source :the hindu

Comments
Post a Comment