ஆடுகளம்' மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் டாப்சி. தற்போது தெலுங்கில் பிசியான நாயகியாக இருந்து வருகிறார். இந்தி படங்களிலும் நடிக்கிறார்.
இவர் சொந்தமாக தொழில் தொடங்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது தங்கை ஷகுன், தோழி பாரா ஆகியோருடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் இவரது நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது.
சொந்த தொழிலில் ஆர்வம் காட்டிவரும் டாப்சி இப்போது தனது வாழ்க்கைக்கும் துணையை நிச்சயம் செய்து இருக்கிறார். டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ்போ என்பவரை தீவிரமாக காதலிக்கிறார். இருவரும் ரகசியமாக சந்திக்கிறார்கள். அடிக்கடி சேர்ந்தே சுற்றுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து கூறியதாவது:–
"சில திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரியாமல் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. என் திருமணம் சில ஆண்டுகள் கழித்துதான் நடைபெறும்.
எனது திருமணம் உலகம் எல்லாம் தெரியும் வகையில் நடக்காது. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மட்டும்தான் நடக்கும்" என்றார்
News source :maalaimalar
Comments
Post a Comment