Skip to main content

youtube

நல்ல கதாபாத்திரம் அமைந்தால் என் தந்தையுடன் இணைந்து நடிப்பேன் சுருதி ஹாசன் சொல்கிறார்

சென்னை,

நல்ல கதாபாத்திரம் அமைந்தால் என் தந்தையுடன் இணைந்து நடிப்பேன் என்று சுருதி ஹாசன் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் சுருதிஹாசன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து இருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த ஸ்ரீமந்துடு படம் சமீபத்தில் வெளியானது. தமிழிலும் இந்த படம் செல்வந்தன் என்ற பெயரில் வந்தது. தற்போது விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன.

ஸ்ரீமந்துடு வெற்றிகரமாக ஓடும் மகிழ்ச்சியில் இருக்கும் அவர் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார்.அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சுருதிஹாசன் கூறியதாவது

 என் தந்தையை போல் திரையுலகில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். அவரைப்போல் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படவும் ஆசைப்படுகிறேன்.

உங்கள் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பீர்களா என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் அவரோடு சேர்ந்து நடிப்பேன்.

 சினிமாவில் நடிக்க வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் ஏரோனட்டிக்கல் என்ஜினியர் ஆகி இருப்பேன். எனக்கு பிடித்த உணவு சாம்பார் சாதம்.அதை பார்த்தால் விட மாட்டேன். என்னுடைய பெரிய பலமே கடவுள் நம்பிக்கைதான்.

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துக்கோண்டு இருக்கிறேன்.அவை அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

இவ்வாறு சுருதி ஹாசன் கூறினார்

Comments

Popular posts from this blog

TAMIL LADY POLICE NAMITHA NEW

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296