கமலஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் கமலின் ஜோடியாக நடித்தவர் லிசி. அதை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தார். 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், பிரபல டைரக்டர் பிரியதர்சனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பதை விட்டுவிட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இதற்கிடையே பிரியதர்சன்– லிசி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
கடந்த ஆண்டு லிசி விவாகரத்து பெற்றார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
திலக்ராஜ் என்ற புதிய இயக்குனர் இயக்கும் 'இட்வெலக்கு ஷேஷம்' என்கிற மலையாளப்படத்தில் நடிக்கிறார். இதில் ஓமியோபதி டாக்டராக நடிக்க இருக்கிறாராம்
News source :maalaimalar
lisi actress acting again

Comments
Post a Comment