டப்ஸ்மாஷ் என்ற கடலி்ல், பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் தற்போது ஐக்கியமாகியுள்ளார்.
ஸ்மார்ட்போன், மனிதர்களின் மூன்றாவது கையாக மாறியுள்ள நிலையில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் என்று அனனவரும் கலக்கிக்கொண்டிருக்க, டப்ஸ்மாஷ் ஆப், எல்லோரையும் தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
திரையுலக பிரபலங்கள் முதல் சாதாரண மக்களையும், இந்த டப்ஸ்மாஷ் விட்டுவைக்கவில்லை. தற்போது அனைவரும் டப்ஸ்மாஷில் அதகளப்படுத்திக்கொண்டிருக்க, புதுவரவாக அதில் இணைந்திருப்பவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.
டப்ஸ்மாஷில், தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் ஒன்றன்பின் ஒன்றாக, சன்னி லியோன் பதிவேற்றியுள்ளார். ஒவ்வொரு டப்ஸ்மாஷிற்கும், தனித்தனியே, கேப்ஷனை இட்டுள்ளார்....தனது டப்ஸ்மாஷ் வேட்டை தொடரும் என்றும் சன்னி லியோன் கூறியுள்ளது, அவரது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
News source : Dinamalar

Comments
Post a Comment