Skip to main content

youtube

மூன்று முகம்' தலைப்பை வசப்படுத்த விஜய் - அட்லீ படக்குழு முயற்சி

இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் | கோப்பு படம்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பாக 'மூன்று முகம்' என வைக்க சத்யா மூவிஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வு, தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.

கோவா படப்பிடிப்பைத் தொடர்ந்து சீனாவில் பாடலை ஒன்றை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. விஜய் உடன் சமந்தா, ராதிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் பாடல்களை ஏற்கனவே முடித்து கொடுத்துவிட்டார். முதன் முறையாக இப்படத்தில் இரண்டு பாடல்களை பாட இருக்கிறார்.

இந்நிலையில், படத்தின் தலைப்பாக 'மூன்று முகம்' இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் அட்லீ கருதி இருக்கிறார். இதற்கான தயாரிப்பு தரப்பு, சத்யா மூவிஸ் நிறுவனத்திடம் தலைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

விரைவில் சத்யா மூவிஸ் நிறுவனத்திடம் நல்ல பதில் வரக்கூடும் என்று நம்புகிறது படக்குழு. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மூன்று முகம்' என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்கிறது கோலிவுட்

News source :The Hindu Tamil

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA