வரலாற்று சிறப்பு மிக்க சென்னை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தக்கால சென்னையையும் தற்போதைய சென்னையையும் ஒப்பிட்டு பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை அசை போடுகிறார்கள்.
ஆனால் இளம் புதுமுகமான நடிகை வேதிகாவுக்கு சென்னை புதுசு.
அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டபோது, ''நான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து இருக்கிறேன். இங்கு எனக்கு பிடித்த இடம் மெரீனா கடற்கரை. நான் நடித்த முதல் பாடல்காட்சியும் மெரீனா கடற்கரையில் தான் எடுக்கப்பட்டது. தற்போது நான் நடித்து வரும் மதராசி படத்தின் மூலம் சென்னையின் சிறப்புகளை தெரிந்து கொண்டேன்.
பொதுவாக எனக்கு கடற்கரை நகரங்கள் மிகவும் பிடிக்கும். நகரங்களில் மற்ற இடங்களை விட கடற்கரைகள் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாகவும், அழகாகவும் இருப்பதும் ஒரு காரணம் ஆகும் என்றார்.
News source : maalaimalar

Comments
Post a Comment