Skip to main content

youtube

ரசிகர்களை கவர்ந்த அஜித் படத்தின் புதிய புகைப்படம்

ajith and laxmi menon .
அஜித்தின் 56-வது படத்தை பற்றி தினமும் ஒரு புதிய செய்தி இணையதளங்களில் வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர்.

இதுவரை, இப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான் படக்குழுவினர் வெளியிட்டு வந்தனர். தற்போது, இப்படத்தில் இடம்பெறும் காட்சியொன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில், தெருவின் இருபுறங்களிலும் மக்கள் மேள தாளங்களுடன்  கைதட்டிக்கொண்டு இருக்க, நடுவே அஜித்தும், லட்சுமிமேனனும் கையில் லக்கேஜுடன் நடந்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள அஜித்தின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 'வீரம்' படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் தாடி, மீசை வைத்து நடித்திருந்த அஜித், இந்த படத்தில் தாடி, மீசைக்கு கல்தா கொடுத்துவிட்டு, தலைமுடியை மட்டும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் வருகிறார். 

தொடர்ந்து சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே அஜித் நடித்து வருவதால், இந்த படத்திலாவது அதை மாற்றுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், இப்போது வெளியாகிள்ள புகைப்படம், அஜித் இதிலும் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே நடித்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் அஜித்துக்கு இரு வில்லன்கள் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்
News source:maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA