Skip to main content

youtube

ரஜினியின் கபாலி படத்தில் கார்த்திக் சுப்பாராஜின் தந்தை


'அட்டக்கத்தி' பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு 'கபாலி' என்ற தலைப்பு உறுதியாகியுள்ளது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகி விட்டது.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் அப்பா கஜராஜும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ், தன்னுடைய அப்பா கஜராஜை ஜிகர்தண்டா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் 'முண்டாசுப்பட்டி' படத்தில் நந்திதாவின் அப்பாவாக நடித்தார்.

தற்போது, ரஜினி நடிக்கும் 'கபாலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வரும் 'இறைவி' படத்திலும் கஜராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

'கபாலி' படத்தில் ரஜினியுடன் நடிப்பது குறித்து கஜராஜ் கூறும்போது, நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவருடைய நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

'கபாலி' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 17-ந் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கான போட்டோ ஷுட்டுக்களை நாளை தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்

News source :

Comments

Popular posts from this blog

TAMIL LADY POLICE NAMITHA NEW

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296