உலக புகழ்பெற்ற டெர்மினேட்டர் நடிகர் அர்னால்ட் ஸ்வாசனேகர் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கட்டுமஸ்தான உடலுக்கு பெயர்போன இவர், ஒரு சின்ன சைக்கிள் பயணத்தின்போது அவரது காதலி மற்றும் பாதுகாவலருடன் போட்டிபோட்டு சைக்கிள் ஓட்டி வெற்றி பெற்றார்.
பொதுவாகவே எதிலும் தோற்க விரும்பாத அர்னால்ட், அவரைக்காட்டிலும் 28 வயது குறைந்த காதலியுடன் போட்டிப்போட்டுக் கொண்டு வேகமாக அமெரிக்க கடற்கரையோரம் பயணித்தது மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தது.
சமீபத்தில் அர்னால்ட் நடிப்பில் டெர்மினேட்டர் சீரியஸின் 5-வது பாகமான 'டெர்மினேட்டர் ஜெனிசிஸ்' வெளி வந்தது. மோசமான திரைக்கதையால் படம் வெற்றியடையவில்லை என்றாலும், ஆறு வருடங்களுக்கு பிறகு அர்னால்ட் மீண்டும் டெர்மினேட்டராக தோன்றியதில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
News source:maalaimalar
Comments
Post a Comment