அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. இதில் அனுஷ்கா ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் அனுஷ்கா குண்டான பெண்ணாக நடித்து வருகிறார். இதற்காக அவர் 15 கிலோவுக்கு மேலாக உடல் எடையை கூட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த சமந்தா அனுஷ்காவை புகழ்ந்து கூறியிருக்கிறார்.
சமந்தா கூறும்போது, 'தற்போது கதாநாயகிகள் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை கூட்டி நடித்திருப்பது மிகவும் ஆச்சரியத்திருக்குரியது. தன்னால் முடிந்த அளவுக்கு படத்திற்கான ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அனுஷ்கா அக்கா சிறப்பான தோற்றத்தில் இருக்கிறார். படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்' என்றார்.
'இஞ்சி இடுப்பழகி' படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.
News source:maalaimalar

Comments
Post a Comment