Skip to main content

youtube

விரைவில் முடிகிறது ரஜினியின் கபாலி பட பிரச்சினை.

ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு 'கபாலி' என்று பெயர் சூட்டப்பட்டது. ரஞ்சித் இயக்கும் இந்த படத்துக்கான பெயர் அறிவிக்கப்பட்டதும், மைசூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஏற்கனவே நான் இதே பெயரில் படம் எடுக்கிறேன். என்று தெரிவித்தார். இதனால் ரஜினி படத்துக்கு பெயர் சூட்டுவதில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. இது குறித்து 'கபாலி' பட தயாரிப்பாளரும் நடிகர் சங்க தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு கூறியதாவது:–

எங்கள் படத்துக்கு கபாலி என்று பெயர் வைக்க முடிவு செய்ததும், இந்த பெயரில் வேறு யாராவது பதிவு செய்து இருக்கிறார்களா என்று பார்த்தோம் 'இல்லை' என்பதை உறுதி செய்த பிறகு தான் 'கபாலி' என்று பெயர் வைப்பதை அறிவித்தோம்.

பின்னர் தான் எங்களுக்கு இப்படி ஒரு படம் இருப்பது தெரியவந்தது. அந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் எங்களை தொடர்ப்பு கொள்ளவில்லை. அந்த தலைப்பை அவர்கள் புதுப்பிக்காததால் தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

எங்கள் பக்கம் தவறு இல்லை. என்றாலும் விரைவில் இந்த பிரச்சினையை சரி செய்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

News source : maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA