சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வாலு' படம் ஒருவழியாக ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டு புது தெம்புடன் வெளிவருகிறது.
'வாலு' வெளியாவதற்கு விஜய் மிகவும் உறுதுணையாக இருந்தார் என்று நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இவ்வளவு தடைகளையும் தாண்டி வெளிவரும் 'வாலு' படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிம்புவை நேரடியாக போனில் தொடர்புகொண்டு, படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் ரஜினி. முதல் ஆளாக தனது படம் வெற்றியடைய ரஜினி வாழ்த்து கூறியது சிம்புவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
'வாலு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனமும், மேஜிக் ரேஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
News source :maalaimalar

Comments
Post a Comment