காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவுடன் நடிகர் பார்த்திபன் செல்பி எடுத்துகொண்ட போட்டோவை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதில் ரசிகர் தரப்பில் இருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் தெரிவித்தனர்.
நடிகர் சாந்தனு திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர் நடிகைகள் வந்து திருமணதம்பதிகளை வாழ்த்துவிட்டு சென்றனர்.
இதில் நடிகர் பார்த்திபன் இன்று சாந்தனுவின் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது நடிகை குஷ்பு உடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்தார். அடுத்த விநாடியே ரசிகர்களின் கமாண்டுகளும் லைக்குகளும் குவிய ஆரம்பித்தன. ஆனால் அதில் பெரும்பாலானாவை குஷ்புவிற்கு எதிரானதாகவே இருந்தது
News source :Daily thanthi

Comments
Post a Comment