Skip to main content

youtube

இளமை தோற்றத்தில் கபாலி ரஜினி. super star rajini kanth young get up in kabaali .


ரஜினியின் புதிய படமான 'கபாலி' படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம் இயக்குனர் ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற இருக்கிறது.

ரஜினியை சமீபத்தில் இந்த பட இயக்குனர் ரஞ்சித் சந்தித்த போது, ரஜினி அவரிடம், 'மக்களின் ஆசீர்வாதத்தாலும், அவர்கள் என்னை நேசிப்பதாலும் நான் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை நீங்கள் விரும்பும்படி எடுங்கள்.

நடிகர்–நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை நீங்களே தேர்வு செய்யுங்கள். கதாபாத்திரங்களையும் உங்கள் விருப்பப்படி உருவாக்கலாம்' என்று சொல்லி டைரக்டருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

கபாலி படத்தில் ரஜினியை மிகவும் இளமையான தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 1991–ல் வெளியாகி வெற்றி பெற்ற 'தர்மதுரை' படத்தில் ரஜினி தோன்றியது போன்ற இளமை ரஜினியாக மாறுகிறார். இதற்காக சிறப்பு மேக்–அப் கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

80–களில் ரஜினி இருந்தது போன்ற தோற்றத்தில் கபாலியில் அவர் நடிப்பார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 2–வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

News source :maalaimalar

Comments