Skip to main content

youtube

10 வருடங்களாக நடித்ததில் தோல்வி படங்களில் பாடம் கற்றேன்; நடிகை அனுஷ்கா சொல்கிறார் anushka tamil cinema actress

சென்னை,

''10 வருடங்களாக நடித்ததில், தோல்வி படங்கள் மூலம் பாடம் கற்றேன்'' என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

அனுஷ்கா

நடிகை அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. அவரது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அவர் தமிழ்- தெலுங்கில் நடித்த ஆரம்ப கால படங்கள் எதிர்பார்த்த வசூல் ஈட்டவில்லை. இதனால் டைரக்டர்கள் அவரை ஒதுக்கினார்கள்.

ஆனால், 2009-ல் வெளியான 'அருந்ததி' படம் அனுஷ்காவுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் சக்கைப்போடு போட்டது. வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.

முன்னணி கதாநாயகி

அதன்பிறகு அவருக்கு படங்கள் குவிந்தன. தற்போது அனுஷ்கா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.

10 வருட சினிமா அனுபவங்கள் பற்றி அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

''நான் சினிமாவில் 10 வருடங்களாக நடிக்கிறேன். இந்த காலகட்டத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. வெற்றி-தோல்விகளை சந்தித்தேன். தோல்வி படங்கள் மூலம் நிறைய பாடங்களை கற்றேன்.

வெற்றி-தோல்வி

வெற்றியில் சந்தோஷப்படுகிறோம். தோல்வியில் துவண்டு போகிறோம். அப்படி இருக்கக் கூடாது. வெற்றி-தோல்வியை ஒன்றாக பார்க்கும் பக்குவம் வரவேண்டும். வெற்றி மரியாதைக்கு உரியது. தோல்வி மதிப்புக்கு உரியது.

தோல்வி எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது. வெற்றிக்கு அவைதான் ஆதாரமாகவும் இருக்கின்றன. என் வாழ்க்கையில் நடந்த தோல்விகளை மட்டும் மறக்கவே மாட்டேன். எப்போதும் ஞாபகம் வைத்து இருப்பேன். அவை மீண்டும் தவறுகள் நடக்காமல் என்னை எச்சரிக்கையாக செயல்படவைக்கின்றன.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
     News source :maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA