ஹன்சிகாவும் உதயநிதியும் ஏற்கெனவே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடித்து வருகிறார்கள்.
இப்படம் பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'ஜாலி எல்எல்பி' படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை அஹமத் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சி அருகே தொடங்கியது.
கதைப்படி இப்படத்தில் ஹன்சிகா டீச்சர் வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக சமீபத்தில் ஆசிரியர் தினத்தை பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார் ஹன்சிகா.
சிறு வயதில் ஹன்சிகாவுக்கு டீச்சராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தாம். இப்போது, ஆசிரியர் தினத்தை குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, குழந்தைகள் என்றால் எனக்கும் ரொம்பவும் உயிர். இப்போதுதான் குழந்தைகளோடு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குழந்தைகளுடன் நடிக்கும்போது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். இப்போது நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.
News source:maalaimalar
Comments
Post a Comment