'எங்கள் அண்ணா' படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இப்படத்தை தொடர்ந்து 'ஏய்', 'இங்லீஸ்காரன்', 'சாணக்யா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நமீதா தவிர்த்து வந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்கவும் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'நான் என்னுடைய உடலை 96 கிலோவில் இருந்து தற்போது 80 கிலோவுக்கும் குறைவாக குறைத்திருக்கிறேன். மேலும் உடல் எடையை குறைக்கவும் முயற்சி எடுத்து வருகிறேன். எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அரசியலில் அமைச்சராகி மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
அரசியலில் ஈடுபாடு இருப்பதால் குஷ்புக்கு போட்டி என்று நினைக்காதீர்கள். குஷ்பு எனக்கு அக்கா மாதிரி. இதற்குமுன் நடந்த தேர்தலில் சில கட்சிகள் என்னை அணுகின. அப்போது விருப்பம் இல்லை. ஆனால் இப்போது அரசியலில் கண்டிப்பாக ஈடுபடுவேன்.
எனக்கு யார் மீதும் காதல் இல்லை. என்னுடைய திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார். என்னுடைய வருங்கால கணவர் கோடீஸ்வரனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ இருக்கவேண்டும் என்று ஆசைப்படவில்லை. தாடி வைத்துக் கொண்டு கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தால் கூட திருமணம் செய்துக் கொள்வேன்' என்றார்.
News source :maalaimalar.
Comments
Post a Comment