நகரி, செப். 4–பிரதமர் நரேந்திர மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தில் இணைந்து தங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்து ஒவ்வொரு இந்திய மக்களும் முன்வர வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.பிரதமரின் இந்த ''தூய்மை இந்தியா'' திட்டத்தில் சேர்ந்த அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் தங்களது ஆதரவாளர்களுடன் தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பிரதமரின் ''தூய்மை இந்தியா'' திட்டத்தின் தெலுங்கானா அரசு தூதராக நடிகை மஞ்சுலட்சுமியை நியமித்து அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், நடிகருமான மோகன்பாபுவின் மகளான மஞ்சுலட்சுமி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் படத்தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.தெலுங்கானா அரசு தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து மஞ்சு லட்சுமி கூறும்போது, ''இது எனக்கு சந்தோஷமாக உள்ளது. இதன் மூலம் எனக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டு உள்ளது'' என்றார். வருகிற 10–ந்தேதி மஞ்சு லட்சுமி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார்.
News source :dailythanthi
Comments
Post a Comment