'காதல்' படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் சந்தியா. அவருக்கு பெயர் சொல்லும் படமாக அது இருந்ததால் 'காதல்' சந்தியா என்று அழைக்கப்பட்டார். சில படங்களில் நடித்தார். என்றாலும் எதிர்பார்த்தபடி அவருக்கு படங்கள் அமையவில்லை.
இந்நிலையில், தற்போது நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் 'கத்துக்குட்டி' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனுக்கு ஜோடியாகவோ படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவோ இவர் நடிக்கவில்லை. சூரியுடன் போட்டி போட்டு ஆடும் ஒரேயொரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஆடி இருக்கிறார்.
'சிக்கன் நான் இல்லடா. சொக்கன் நீ இல்லடா. மீனாட்சி சிக்காதுடா' என்ற பாடலுக்கு சூரி மற்றும் நடன குழுவினருடன் காதல் சந்தியாவும் சேர்த்து ஆடி அசத்தி இருக்கிறார். இந்த நடன காட்சி 'கத்துக்குட்டி' படத்தில் மிகவும் ரசிக்கும் விதமாக வந்து இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
News source:maalaimalar

Comments
Post a Comment