விஜயின் கத்தி படம், தமிழகத்தில் பிரபலமடைந்ததோ இல்லையோ, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பிரபலமடைந்ததை இதை யாரும் மறுக்க முடியாது.
லைக்கா நிறுவனத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின், சுமூக தீர்வு காணப்பட்டு பின் படம் வெளியாகி வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, படத்தயாரிப்பில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த லைக்கா புரொடெக்ஷன்ஸ் நிறுவனம், காக்கா முட்டை மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணை படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை மட்டுமல்லாது, தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள நானும் ரெளடிதான் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது.
கோலிவுட்டில் மீண்டும் தனது பரப்பை விஸ்தரிக்கும் வகையிலான நடவடிக்கைளில் லைக்கா புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான எந்திரன் 2 படத்தை எடுக்கும் பணிகளை, இயக்குநர் ஷங்கர் துவக்கியுள்ளார். ரஜினியே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக, காத்ரீனா கைப் நடிக்க உள்ளார்.
எந்திரன் 2 படத்தையும், லைக்கா புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது.
கத்தி படத்தின் போது ஏற்பட்ட எதிர்ப்பு, ரஜினி படத்திற்கு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
News source :Dinamalar .
Comments
Post a Comment