நேற்று இரவு காலமான பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினி, இன்று காலை சுமார் 10.30 மணியளவில் மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, நடிகர்கள் கவுண்டமணி, சிவகுமார், நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி, டி.ராஜேந்தர், பாக்யராஜ், ராகவா லாரன்ஸ், பாண்டியராஜன், தியாகு, ராமராஜன், ஸ்ரீமன், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, சரத்பாபு, பார்த்திபன், இயக்குனர் வசந்த், நடிகைகள் சச்சு, கோவை சரளா, விந்தியா, சுகன்யா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளனர்.
News source:maalaimalar

Comments
Post a Comment