Skip to main content

youtube

தனது உடலை பற்றி கேவலமாக பேசியவர்களுக்கு வின் டீசலின் பதில்


உலக அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஹாலிவுட் படங்களின் பட்டியலில் 'பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' படமும் ஒன்று. வேகமாக கார் ஓட்டுவது, வேகமாக கார் ஓட்டி பல சாகசங்களை செய்வது உள்ளிட்டவையை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த 'பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' மொத்தம் 7 பாகங்களாக வெளியாகியுள்ளது.

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் பாகங்களில் பால் வாக்கருடன் இணைந்து கலக்கியவர் வின் டீசல்.

நடிகர்கள் என்றாலே கட்டுகோப்பான உடல் அமைப்புடன், சிக்ஸ் பேக், எயிட் பேக் வைத்திருக்க வேண்டும் என்று பல ரசிகர் எதிர்பார்க்கிறார்கள். சில ரசிகர்கள் வின் டீசலுக்கு தொப்பை இருப்பதாக கூறி கடுமையாக விமர்சித்தனர்.

தற்போது அவரை விமர்சனம் செய்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக சிக்ஸ் பேக்குடன் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், உடலை காரணமாக வைத்து ஒருவரை அவமானப்படுத்துவது மிகவும் தவறு என தெரித்துள்ளார்.

News source:maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA