நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பூச்சி முருகன் தன்னிடம் வாழ்த்து பெற்றதை கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அணியினருக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மிகுந்த பரபரப்போடு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முடிந்து விட்டது. இனி வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையோடு இருந்து நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டுமென்று விரும்புகிறேன்" என அவர் கூறியுள்ளார்.
News source:The Hindu

Comments
Post a Comment