Skip to main content

youtube

மலாக்கா கவர்னரின் விருந்தில் கலந்துகொண்ட ரஜினி.

'கபாலி' படத்தின் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றடைந்தார் ரஜினி. ரஜினியின் வருகையையொட்டி கோலாம்பூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமானநிலையத்தில் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, விலையுயர்ந்த சொகுசு காரில் பயணம் செய்த ரஜினி, அங்கிருந்து நேராக மலாக்கா சென்றடைந்தார். மலாக்காவிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மலாக்கா கவர்னரை சந்தித்த ரஜினி, அவருடன் சிறப்பு விருந்திலும் கலந்துகொண்டார். இந்த விருந்தில் கலைப்புலி தாணுவும் கலந்துக்கொண்டார். இதையடுத்து, மலேசியா பிரதமரை ரஜினி சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நாளை முதல் மலாக்காவில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து நவம்பர் 2-ந் தேதி வரை மலாக்காவிலேயே படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். அதைத்தொடர்ந்து, மலேசியாவின் முக்கியமான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

கபாலி படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

News source:maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA