Skip to main content

youtube

ஸ்ருதிஹாசனின் அழகை புகழ்ந்த தமன்னா

திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகள் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஒரே காலகட்டத்தில் நடிக்கும் நடிகைகள் ஒருவர் மற்றவரை புகழ்வது இல்லை. அதுவும் ஒருவர் அழகைப் பற்றி மற்றவர்கள் வாயை திறக்க மாட்டார்கள்.

ஆனால் அப்படி ஒரு அதிசயம் இப்போது நடந்து இருக்கிறது. 'புலி' படத்தில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன் நடித்து இருக்கிறார். அவரை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து இருக்கிறார்.

அதில், ''நான் புலி படம் பார்த்தேன். அதில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள சுருதிஹாசன், ''மிகவும் அன்பான தமன்னாவுக்கு மிகவும் நல்ல மனது உங்களுக்கு எனது நன்றி' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

தமன்னா இப்போது 'பாகுபலி–2', கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் 'தோழா' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

சுருதிஹாசன் இப்போது அஜித்துடன் 'வேதாளம்', சூர்யாவின் 'சிங்கம்–3' உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார். இளம் நாயகிகள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் மனம் குளிர பாராட்டி இருப்பது சினிமா வட்டாரத்தில் முக்கிய செய்தியாக பேசப்படுகிறது.
News source :maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA